Wednesday, 30 January 2019


பகுதி 10
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

செக்ஸ் என்றால் என்ன?
ஓசூர் நகரத்தில் இருந்து 27 வயது வாலிபர் செந்தில் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அவரிடம் தனியாக பேசிய போது தன்னுடன் காதில் யாரோ பேசிகொண்டு இருக்கின்றார்கள்  அவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றார்கள் என்பது போல் சொன்னார். தனக்கு செக்ஸ் மீது ஆர்வம் அதிகமாக இருக்கின்றது  அதனால்  இண்டர்நெட்டில் சென்று ஆபாசமான படங்கள் பார்ப்பது மட்டும் எனக்கு பிடிக்கும். என்றார். தனக்கு திருமணம் ஆகி 7 மாதம் ஆகின்றது ஆனால் தற்போது மனைவி பிரிந்து இருப்பதாகவும் சொன்னார். காரணம் கேட்டபோது தனக்கும் அவருக்கும் ஒத்துவரவில்லை என்றும் தன்னை அவர் அடிமைபடுத்துகின்றார் என்றார். 
திருமண வாழ்க்கை பற்றி கேட்ட போது தனக்கு செக்ஸ் பிடிக்கவில்லை என்றார். அதாவது செக்ஸ் பார்க்க பிடிக்கின்றது  ஆனால் செக்ஸ்ல் ஈடுபடுவது பிடிக்கவில்லை என்றார். பிறகு என்ன நடந்தது என்று விளக்கமாக கேட்டபோது மனைவியுடன் ஒருமுறை மட்டுமே உறவு வைத்ததாகவும் அப்போது அதுவும் மனைவி  கட்டாயபடுத்தி உறவு செய்ய சொன்னதாகவும் அதனால் முதல் முறையாக உறவு வைத்த போது எனது ஆண் உறுப்பில் இருந்து ரத்தம் வந்து பயம் ஏற்பட்டுவிட்டது என்றார்.
(குறிப்பு ; ஒரு சிலருக்கு முதன் முதன் முறையாக உறவு வைக்கும் போது ஆண்உறுப்பில் கீழ்பகுதியில் லேசாக காயம் ஏற்பட்டு ரத்தம் வருவது சாதாரணமான நிலையாகும். அது போல் தான் அந்த நபருக்கும் தோல் பகுதி கிழிந்து ரத்தம் வந்து உள்ளது)
அதனால் எனக்கு பயமாக இருக்கின்றது என்றார். மீண்டும் என்னிடம்  அவர் செக்ஸ் வைத்தால் உறவு செய்தால் என்ன வரும் அதனால் என்ன பயன் என்று என்னிடம் கேட்டார். மேலும் சிலமுறை நான் சுயஇன்பம் செய்த போது ஆணுறுப்பில் இருந்து பால் போல தண்ணீர் மாதிரி வந்தது அது என்ன என்றும் கேட்டார். அப்போது நான் இதை கேட்டு அதிர்ந்து விட்டேன். அதாவது 27 வயது நல்ல கட்டுடல் கொண்ட  வாலிபன் ஒருவன் கேட்கும் கேள்வி எப்படி உள்ளது என்று யோசனை செய்து பார்த்தேன்.  தான்  டிப்ளாமா படித்து ஒரு கம்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் ஆனால் தன்னால் நன்றாக வேலை செய்ய முடியவில்லை அதனால் வேலைவிட்டு நின்றுவிட்டதாகவும் சொன்னார்.  தன்னால் எதையும் ஞாபகம் வைத்துகொள்ள முடியவில்லை எல்லாம் மறந்துவிடுகின்றது  சில நேரத்தில் ஒரு இடத்திற்கு சென்றால் தான் எதற்காக அந்த இடத்துக்கு சென்றோம் என்று  மறந்துவிடுகின்றது.  அதனால் அந்த இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து யோசனை செய்வதாக சொன்னார்  நீண்ட நேரத்துக்கு பிறகு வீட்டுக்கு செல்வதாகவும் சொன்னார். . தற்போது கடந்த நான்கு மாதங்களாக  மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும் தனக்கு எதிராக சதி செய்து கொண்டு இருப்பதாகவும் சொன்னார். தன்னால் தூங்க முடியவில்லை என்றும் பரிதாபமாக சொன்னார்.
அந்த நபரை ஆழ்ந்த தூக்கத்தில் கொண்டு சென்று அவருக்கு தேவையான நல்லபரிந்துரைகள் கொடுத்து இனி நீ தைரியமானவன் உனக்கு நல்ல ஞாபகசக்தி நன்றாக உள்ளது இனி நன்றாக தூங்குவாய் என்றும் பரிந்துரைகள் சொல்லபட்டது. அவர் ஆழ்மனதில் உள்ள பதிவுகள் என்ன என்று கேட்ட  போது தன் குடும்பத்தார் குறிப்பாக தனது தந்தை சிறுவயதில் தன்னை கடுமையானமுறையில் நடந்துகொண்டதும் அதனால் எனக்கு இப்படி ஏற்பட்டுள்ளது என்று சொன்னபோது  அவர் தந்தை அது சரி என்று ஒத்து கொண்டார். பிறகு அவர் ஆழ்மனதில் உள்ள தேவையற்ற பதிவுகளை அழித்து விட்டு நல்ல பதிவுகளை பதிவு செய்து அனுப்பிவைத்தோம்.  அந்த நபரின் இது போன்ற மன பாதிப்புகளுக்கு அவர் தந்தை தான் காரணம். அவரின் சிறுவயதில்  ஏற்படுத்திய அளவுக்கு மீறிய கட்டுபாடு என்ற வகையில் அடக்கி அதிகமாக மிரட்டி  வளர்த்தது தான் காரணம்  ஆகும் 
இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும் என்பதற்காக கட்டுபடுத்தி ,மிரட்டி அடக்கி வைக்கும் போது எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்பட்ட பிறகு அந்த நிலையை சரி செய்வது மிகவும் கஸ்டமாகி வாழ்க்கையே புரட்டி போட்டுவிடும் மேலும் இது போன்ற மனநிலை பாதித்த ஆண்களுக்கு திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும் என்று தவறாக கருதி பெண் வீட்டாருக்கு தெரியாமல் திருமணம் செய்து வைக்கும் போது அந்த அப்பாவி பெண்ணுடைய வாழ்க்கையையும் நாசமாகி போய் அந்த பாபத்துக்கும் சேர்ந்து ஆளாகவேண்டி இருக்கின்றது.. அதனால் அந்த தந்தை தன் மகனின் வாழ்க்கை மட்டுமல்லாது ஒரு பெண்ணின் வாழ்கையும் சேர்த்து பாழாக்கிவிட்டார்.  பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.                       .

No comments:

Post a Comment