Wednesday 30 January 2019

பகுதி 18
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

கர்ப்பபையில் மனம் பாதிப்பு:
கும்பகோணத்தில்  இருந்து ஒரு பெண் தனக்கு  மனரீதியாக கடுமையான பாதிப்பு என்றும்  திருமணமாகி 10  வருடம் கழித்து குழந்தை  பிறந்ததுஆனால் குழந்தை இறந்து விட்டதுஇனிமேல் குழந்தை  மீது பாசமில்லை  வேண்டாம்  என்றும்  தன்னை எல்லோரும் பைத்தியம் மனநிலை பாதிப்பு என்று மனநல மருத்துவரிடம்  அழைத்து செல்கின்றனர்எனக்கு  பேய்பிடித்து விட்டது  என்றும், என்னை மனரீதியாக சிரமபடுத்துகின்றார்கள். நான் நன்றாகத்தான் இருக்கின்றேன்  இதற்கு தீர்வுவேண்டும்  என்று  வந்தார்அவரை பற்றி  விசாரித்து விட்டு  அவரை ஆழ்ந்த தூக்க நிலைக்கு கொண்டு  சென்ற போது  இந்த  பிரச்சனைக்கு காரணம் என்னவென்று தெரிந்தபோது மிகவும்  அதிர்ச்சியாகவும் ஆச்சயமாகவும்  இருந்தது. அவரின்  ஆழ்மனதோடு பேசிய போது தனக்கு  விருப்பமில்லாமல் தன்னைவிட வயதில்  மூத்தமாமன் அவர்களுக்கு  திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். எனக்கு என் மாமனை பிடிக்கவில்லை எனக்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தேன்தான் சிறுமியாக  இருந்தபோது  தன் தந்தை  நண்பர்களை  அழைத்து கொண்டு வீட்டுக்குவந்து தன்  முன்னால் மது அருந்தியது தன்  மனதை பாதித்து விட்டதாக  கூறினார்... அப்போது  அந்த  குடிகாரர்கள் சிலர்  என்னை கெட்ட எண்ணத்தோடு பார்த்து  பேசியது  தொட்டது எல்லாம்மனதை பாதித்ததாக கூறினார்.. 
மேலும் தான்  தாயின் வயிற்றில்  கருவாக (குழந்தை) இருந்த  போது  இந்த பூமியில் பிறப்பதற்கே  விருப்பமில்லை என்றும்கருவில்இருந்த  போது தந்தை  குடித்து விட்டு வந்து தாயை  கஸ்டப்படுத்தி அடித்தது  எனக்கு மனரீதியாக  கஸ்டமாகஇருந்தது  என்று  சொல்லி அழுத போது அவரின்  கர்ப்பகால ஆழ்மனபதிவுகள் நினைவுகள்  அவரை  எந்த அளவு  மனதை  பாதித்துள்ளது    என்றும், அவர் எந்தஅளவு கஸ்டம்  மனதளவில் அடைந்தார்  என்பது  தெரிகின்றது. தாயின் .கர்ப்பத்தில் மனம்பாதித்த நோயாளிகளில் இவரும் ஒருவர். அவருக்கு ஆழ்மனதில் சில ஆறுதல் வார்த்தைகள் கூறி அவர் மனதில் இருந்த கெட்டபதிவுகளை அழித்துவிட்டு  நல்ல பதிவுகளை  இனி எதிர்காலம் நன்றாக இருக்கும் மேலும் ஒரு குழந்தை பெற்று கொண்டு  அந்த குழந்தை மீது நல்ல பாசத்துடன் அன்புடன் வளர்த்து வரவேண்டும்என்றும்,
மேலும்  சில நல்ல பதிவுகளை  சொல்லி ஆழ்மனதில் பதிவு செய்த பின்  , தன்னிலைக்கு வர செய்த போது அந்த பெண்ணின்  முகத்தில் அற்புதமான  ஒரு பொழிவு பிரகாசமாக தெரிந்ததுதேவையானால் 10  நாள் கழித்து மேலும் ஒரு முறை வரசொன்னேன்.   அந்த  ஒரு நிகழ்வு சிகிச்சையில் அவருக்கு  மனம் முழுவதும்  நன்றாக ஆகி அவர்  நல்ல நிலைக்கு  திரும்பினார்

No comments:

Post a Comment