Wednesday 30 January 2019


பகுதி 13
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

13 மணி நேர குளியல்:
ஒரு நபர் 13 மணி நேரம் குளித்தார் என்றால் என்ன அர்த்தம்  ? அவர் கின்னஸ் சாதனை செய்தாரா என்று கேட்காதீர்கள்  அவர் ஆழ்மனதில் ஏற்பட்ட பாதிப்பு அதனால் அவ்வாறு குளித்து தன்னை சுத்தமாக்கி கொள்கின்றார். என்ன ஆச்சரியமாக உள்ளதா .தொடர்ந்து படியுங்கள் ஆம் 13 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் குளிக்கும் போது அவர் பயன்படுத்திய சோப்பின் அளவு அதாவது 75 கிராம் எடை உள்ள 3 சோப்புகளை பயன் படுத்தி குளித்து உள்ளார். மேலும் ஆச்சர்யபடாதீர்கள் ஆம் உண்மை திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் இருந்து சிகிச்சைக்காக ராமசந்திரன் (பெயர் மாற்றபட்டுள்ளது.)  அழைத்து வந்தார் அவரது சகோதரர்.. அவர் பி எஸ்சி பிஎட் படித்து இருப்பதாகவும் ஆசிரியராக வேலை செய்து வந்ததாகவும் தன்னால் தற்போது வேலை செய்யமுடியாததால் வேலையை விட்டுவிட்டதாகவும், வீட்டில் தற்போது சும்மா இருப்பாதாகவும் தனக்கு உதவியாக தன் தாய் இருப்பதாகவும் சொன்னார்.
தன்னால் தினமும் சுமார் 2 முதல் 3 மணிநேரம் வரை குளிப்பதாகவும் தன் உடலில் மனதில் அழுக்கு ஒட்டிகொள்வதகவும் அதனால் குளித்து அந்த அழுக்கை நீக்கிகொள்வதாகவும் சொன்னார். ஒரு நாளைக்கு 75 கிராம் சோப்பு ஒன்று முழுமையாக தேவைப்படுவதாகவும் ஆனாலும் குளித்த திருப்தி ஏற்படுவது இல்லை என்றார். இது போல் ஏன் அதிக நேரம் குளித்து வர என்ன காரணம் என்று கேட்டபோது தனக்கு புரியவில்லை என்றார் அந்த பட்டதாரி நபருக்கு வயது 44 இன்னும் திருமணம் ஆகவில்லை.  தான் அரசு பள்ளியில் வேலைக்கு சேர்ந்த பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்றார்.. ஆனாலும் பெண்களை கண்டால் எனக்கு பிடிக்கவில்லை என்றும் சொன்ன போது அவரை பார்க்க மிகவும் பரிதாபமாக  இருந்தது.
தனக்கு எதாவது கிடைத்தால் மட்டுமே அடுத்தவரிம் பேசுவேன் இல்லை என்றால் யாரிடமும்பேசமாட்டேன் என்றார். தன்னை யாராவது தெரியாமல் தொட்டு விட்டால் கூட உடனே அந்த ஆடைகளை கழற்றிபோட்டுவிட்டு உடனே குளித்து அந்த ஆடையை தண்ணீரில் நனைத்து, துவைத்து போட்டுவிட்டு தான் வேறுவேலை செய்வார்..  அதனால் வெளியில் எங்கும் செல்வது கிடையாது  வெளியில் செல்ல வேண்டியநிலை வந்தால் மிகவும் கஸ்டத்துடன் பஸ்சில் மிகவும் கூச்ச நிலையில் அமர்ந்து வருவார். பக்கத்தில் அமரும் நபர் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தால் இருக்கையைவிட்டு எழுந்து நின்றுகொண்டு தான் பயணம் செய்வார். ஒட்டலில் சாப்பிட சென்றால் கூட அந்த டேபிலில் சப்ளை செய்யும் நபர் நன்றாக உடைஉடுத்தி இருக்கின்றாரா, அவர் நெற்றியில் பொட்டுவைத்து இருக்கின்றாரா என்று பார்த்து தான் சாப்பிடுவார். அதாவது அந்த மாதிரி வேலைசெய்யும் நபராக இருந்தால் அவர் சுத்தமாக குளித்து இருப்பார் என்பது அவரது எண்ணம்.   சாப்பிட்டதற்கு பில் கொடுத்து மீதி சில்லரை காசு அல்லது நோட்டுகளை தனியாக  பேப்பரில்  சுருட்டிகட்டி வைத்து வீட்டுக்கு வந்தபிறகு அந்த பணத்தை நீரில் போட்டு கழுவி சோப்புபோட்டு கழுவி காயவைத்து  தான் அவைகளை மீண்டும் பயன்படுத்துவார்.. அவரது கையை பிடித்து பார்த்த போது அவரின் தோல் மிகவும் மெல்லிதாகவும், கொஞ்சம் அழுத்திபிடித்தால் தோல்கையோடு வந்துவிடுவது போல் இருந்தது. அவருடைய தோல் வெளுத்துபோய் தொடுவதற்கு ஒருமாதிரி இருந்தது.  இந்த அளவு கடுமையான  பாதிப்புக்கு ஆள்ஆன அந்த   நபருக்கு ஹிப்னோ சிகிச்சை செய்து ஆழ்மனதில் தூங்கவைத்து அவரின் ஆழ்மனதுடன் பேசிய போது தான் அவர் செய்கின்ற அத்தனை செயல்களுக்கும் காரணம் புரிந்தது.  ஆச்சர்யமாக இருந்தது.
அதாவது அவரின் மனதில் இறந்தவர்களின் பெயர் கேட்டாலோ அல்லது பத்திரிக்கையில் பார்த்தாலோ அவரின் உடம்பில், மனதில் அழுக்கு ஏற்பட்டு விட்டது போல் அவருக்கு ஒரு பிரமையாக இருந்தது. அதனால் அவர் அந்த மனதில் உள்ள  அழுக்கை சோப்பு போட்டு குளித்தால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்  தினமும் நீண்ட நேரம் குளிப்பதாகவும் ஆழ்மனதில் உள்ள பதிவுகளை  சொன்னார்.  குளிக்கும் போது இறந்தவர் ஞாபகம் வந்தால் தொடர்ந்து குளித்துகொண்டு இருப்பதாகவும் அந்த இறந்தவர்  நினைவு போகும் வரை குளிப்பதாகவும் சொன்னார். அவரது தந்தை சிறிது காலத்துக்கு முன்பாக இறந்துவிட்டார் என்பது தனிச்செய்தி.
மேலும் அடுத்தவர் அதாவது அவரைதவிர அனைவரும் அழுக்காக இருப்பாதாகவும் அதனால் அவர்கள் தொட்டால் அவர்களின் அழுக்கு தன் மீது பட்டுவிட்டது அதனால் குளித்து அந்த அழுக்கை போக்கி கொள்வதாகவும் சொன்னார்.  அந்த நபருக்கு ஆழ்மனதில் இறந்தவர்கள் அணைவரும் தெய்வத்துக்கு சமமானவர்கள் அதனால் அவர்களை வணங்கி மரியாதை செய்யவேண்டும் அவர்களை மனதால் என்றும் நினைத்து இருக்கவேண்டும்  மேலும் மற்றவர்களும் தங்களை போன்று தான் தினசரி குளித்து சுத்தமாக இருக்கின்றார்கள், சிலர் உங்களைவிட அதிகமான சுத்தமாகவும் இருக்கின்றார்கள் என்றும் மேலும்  அனைவரும் சுத்தமானவர்கள் என்றும் பதிவு செய்து அவரின் நல்ல வாழ்க்கைக்கு மேலும் சில நல்லபதிவுகள் செய்து ஆழ்ந்தநிலையில் இருந்து தன்னிலைக்கு வரசெய்து  சிகிச்சை கொடுத்தோம்.  தன்னிலைக்கு வந்த பிறகு அவர் சகோதரர்  சொன்ன செய்தி சுமார் 6 மாதத்திற்கு முன்னால் ஒரு நாள் காலையில் இருந்து 13 மணி நேரம் தொடர்ந்து குளித்துகொண்டு இருந்தார். எவ்வளவு சொல்லியும் அவர்  குளியல் அறையைவிட்டு வெளியில்வரவில்லை. அன்று அவர்   75 கிராம் சோப்புகள்  மூன்று முழு சோப்புகள் பயன்படுத்தினார். என்று சொன்ன போது ஆச்சர்யமாக இருந்தது. மேலும் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் தீர்ந்ததால் மட்டுமே அவர் வெளியில் வந்தார்,. இல்லை என்றால் தொடர்ந்து குளித்து கொண்டு இருப்பார். என்றும் சொன்னார் (அன்று அவர்கள் வீட்டின் அருகில்  ஒருவர் இறந்து விட்டார் என்பது பின்பு தான் தெரிந்தது அந்த இறந்தவரின் வீட்டில் இருந்து உடலை எடுத்து செல்லும் வரை குளித்து கொண்டு இருந்தார். ) .
அந்த நபருக்கு மேலும் சில நல்லஆலோசனைகள் சொல்லிஅனுப்பி வைத்தோம். நீண்டநேரம் பயணத்தினால் அவரால் தனது சகோதரரை மீண்டும் அழைத்து சிகிச்சைக்காக வர முடியவில்லை  அத்துடன் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சொல்லி வருத்தபட்டார், அந்த நபரை நினைத்து  பார்க்கும் போது மனம் பரிதாபமாக இருந்தது.

No comments:

Post a Comment