Wednesday, 30 January 2019


பகுதி 17
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :
புழுவாக  குருவியாக பிறந்தார்:
மதுரையிலிருந்து வந்த  ஒரு நபருக்கு  ஹிப்னாடிசம் மூலம் வாழ்க்கையின் முன்ஜென்ம நிகழ்வுகள் அறிய நினைத்து  அந்த  நபரை  ஆழ்ந்த தூக்க நிலைக்கு கொண்டு சென்று  ஆழ்மனதோடு  பேசும் போது  அவர்   5 வயது  குழந்தையாக  இருந்த போது  செல்லமாக  கருவா குஞ்சு என்று அழைத்தார்கள்,  என்றார்  அதாவது  அவரின் போன  ஜென்மத்தில் அவரின்  பெயர்  கருப்பா  என்பதாகும்.   மேலும் தான் ஒரு விவசாய குடும்பத்தில்  பிறந்து  பக்தியால்  திருமணம் செய்யவில்லை  என்றும்  சிறியவயதில் தந்தை  குதிரை வைத்து விவசாயம் செய்துவந்ததாக சொன்னார்.  தனக்கு இரண்டு சகோதரிகள் இருப்பதாகவும் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் சகோதரிகளுக்கு திருமணம்ஆகிவிட்டது என்றார். தனக்கு பக்தி அதிகமானதால் திருமணம் செய்யவில்லை என்றும் வாழ்க்கையின் கடைசியில் பரதேசி போல் சாமியாராக வாழ்ந்து வந்ததாக சொன்னார்.. ,
கடைசியில் கப்பலில் சென்ற போது கடல் நீரில் முழ்கி  இறந்து போகும் போது அவர் தண்ணீர் குடித்தநிகழ்வு அப்படியே செய்துகாட்டி அழுதபோது ஆச்சர்யமாக இருந்தது. அப்போது தன் மனம் கடுமையாக பாதித்ததாக சொன்னார்.   அப்போது  அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி அழுதது  போன ஜென்மநிகழ்வு  எந்த அளவு  உண்மை  என்பது தெரிகின்றது, போனஜென்மத்தில் அவர்  கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 
அதற்கு முந்தய ஜென்மத்தில்  அவர்  ஒருகுருவியாக  பிறந்தும்  தன்  துணை வெளியே  உணவுக்காக சென்றது திரும்பிவரவில்லை  என்றும், தனக்கு ஒரு குஞ்சு இருப்பதாகவும் அதனால் தனது துணை தனக்கு உணவு எடுப்பதற்காக வெளியே சென்று உள்ளதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் சொன்னார்.  தன் துணை வராமல் கடைசிவரை தனியாகஇருந்து இறந்ததாகவும் சொன்னார். ஒருமுறை கடுமையான மழைபெய்வதாகவும் அதனால் குளிர்அடிப்பதாகவும் சொன்னார்.  அந்த ஜென்மத்தில்  அவர் அனுபவத்தை சொன்ன போது  மிக்கஆச்சர்யமாக  இருந்தது 
அதற்கு  முந்தய ஜென்மத்தில்  அவர்  ஒரு  புலியாக பிறந்ததாக சொன்னார். கண்கள் கோல்டு கலரில் இருப்பதாகவும் தான் யாரையும் விட்டுவைக்கமாட்டேன் எல்லோரையும் அடித்து சாப்பிட்டுவிடுவேன் என்றார். தான் ஆற்றில் மீன்பிடித்து சாப்பிடுவது பிடிக்கும் என்றார்.  அப்போது அதன்  துணையுடன்  அடிக்கடி சண்டைபோட்டு  தனியாக இருந்ததாகவும்  சொன்னார்.   தான் பாம்பு  முதல் கொண்டு அணைத்து  மிருகங்களையும்  உணவுக்காக அடித்து கொன்று விடுவேன் என்றார்.  கடைசியில்  ஒருயாணையுடன் சண்டைபோட்டு  ஒருகால் எலும்பு முறிந்து போனதால் எழுந்து  நடக்கமுடியவில்லை   அதனால்  சாப்பிட முடியாமல்  கஸ்டப்பட்டு  தனிமையாகஇருந்து  இறந்ததாகவும்  கூறினார்.
 அதற்கு முந்தய ஜென்மத்தில் அவர் ஒரு மஞ்சள்நிற  புழுவாக இருந்து, இறந்துபோன   உடம்பின்  மாமிச்தை சாப்பிடுவதாகவும்,  அந்த இறந்து  போன உடம்பு  மாமிசத்தை உண்ணும்  போது  மிக கெட்டவாசணை  வீசுவதாகவும்  அது தனக்கு பிடிக்கவில்லை  என்றும், சொன்னார்.  இவருக்கு தொடர்ந்து நான்கு முன்ஜென்மம்  பார்த்த போது  3  ஜென்மத்தில் தன் துணையுடன் அவர் வாழ்கை  வாழமுடியவில்லை  அது போல்  இந்த ஜென்மத்திலும்  தன்  மனைவியுடன்  வாழாமல் தனித்து வாழ்ந்து வருகின்றார்   என்பது எந்த  அளவு முன்ஜென்ம  வாழ்க்கை இந்த ஜென்ம  வாழ்கையோடு தொடர்ந்து வருகின்றது என்பது உண்மையாகின்றது (இந்த நபருக்கு தான் அதிகபட்சமாக 5 ஜென்ம வாழ்க்கை நிகழ்வுகள் ஆழ்மனதின் மூலம் அறியபட்டது இதன் முழு நிகழ்வும் பதிவு செய்யபட்டுள்ளது.  சிறப்பு செய்தி) 

No comments:

Post a Comment