Wednesday 30 January 2019




பகுதி 8   
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

ஆழ்மனபாதிப்பின் வெளிப்பாடுகள் தான்  மனநோய்கள், மனபிரச்சனைகள் ஆகும்.  அதாவது பயம் மறதி கோபம் தூக்கம் கனவு தற்கொலை திக்குவாய் பக்கவாதம் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் இதற்கு எப்படி சிகிச்சை செய்வது  இந்த பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு   ஆழ்மனதில் ஏற்பட்ட பாதிப்புகளை அவர்களின் ஆழ்மனதில் இருந்து அகற்றாத வரை, அழிக்காதவரை  அந்த நபருக்கு  மனநோய் தீராது, தீர்க்க முடியாது. சரி ஆழ்மனதில் எவ்வாறு அந்த பாதிப்பை அகற்றுவது.  ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை என்றால் என்ன ?  அதாவது ஒருவரை படுக்கையில் படுக்கவைத்து  ஒரு வகையான மெல்லிசை ஒன்று ஒலிக்க செய்து  அதை அவர் கூர்ந்து கேட்குபடி செய்து அப்போது சில வார்த்தைகள் தொடர்ந்து சொல்லும் போது அவர் தன்னை மறந்து ஆழ்ந்த தூக்கநிலைக்கு செல்வார்.  அதாவது உடல் முழுமையாக தூக்கத்தில் இருக்கும்.  கோமா என்ற நிலைக்கு அருகில் இருப்பது போன்ற நிலை ஏற்படும் அப்போது நாம் பேசுவதை கேட்பார், பதில் சொல்லுவார். ஆனாலும் அவர் ஆழ்நிலை தூக்கத்தில் இருப்பார். தூங்கி எழுந்து அவருக்கு தான் என்ன பேசினோம் என்று அவருக்கு தெரியாது. எவ்வளவு நேரம் தூங்க நிலையில் இருந்தோம் என்று தெரியாது.  இந்த நிலை தான் ஹிப்னோ ஆழ்ந்த தூக்கநிலை என்பது.  அப்போது அவரின் உடம் தூங்கும்  ஆழ்மனதை விழிக்க செய்து அவரின் ஆழ்மனதில் ஏற்பட்ட பிரச்சனை என்ன என்று கேட்டால் எப்போது நடந்தது, யாரால் ? ஏன் ?, எதனால்? நடந்த நிகழ்வுகலை உண்மையாக சொல்லுவார். அப்போது அவரின் மனதுக்கு தக்கபடி நல்ல பரிந்துரைகள் பதிவு செய்து  அவரின் மனதில் ஏற்பட்ட கெட்ட பதிவுகளை அறிந்து அதை முழுவதுமாக அழித்துவிடும் போது அந்த பதிவுகள் அழிந்துவிடும். அப்போது அவரின் மனம் முழுவதும் தூயமையாக மாறிவிடும்    அதன் பிறகு சிறிது நேரம் கொடுத்து தன்னிலைக்கு வர செய்யும் போது அவர்  தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லும் போது கடவுளே தன் முன்னால் இருப்பதாக உணருவார். தன்னுடைய மனம் மிகவும் மென்மையாக இருக்கிறது நன்றாக இருக்கிறது என்று மகிழ்ச்சியாக சொல்லுவார். மேலும் தனக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது தான் இனி நன்றாக எதிர்காலத்தில் இருப்பேன் என்று சந்தோஷத்தில் சொல்லுவார். தன்னுடைய மனபிரச்சனை தீர்ந்ததாக அப்போதே உணருவார்.
  இதுவே ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை என்பதாகும்..
ஹிப்னாடிசம் என்பது  உடல் முழுவதையும் தூங்க வைத்து   ஆழ்மனதுடன் பேசுவது தான் ஹிப்னாடிசம் என்பது ஆகும்.  அதற்கு சில சரியான வார்த்தைகள் பயன்படுத்துதல் இதற்க்கான சிறப்பாகும்.    இந்த ஆழ்மன சிகிச்சை தனக்கு தானே செய்து கொள்வது என்பது கடினமானகும். அதன் மூலம் தன் வாழ்க்கையில் எப்படி வெற்றிகொள்வது, தன் லட்சியம் அடைவது எப்படி  என்று அறிந்துகொள்ளலாம். தான் மனதில் நினைப்பதை நடக்க செய்யலாம். அற்புதமாக தூங்கலாம்,    உலகத்தில் கிடைக்காத நிம்மதியை அடையலாம்.  தன்னை தானறிதல் என்ற தத்துவத்தை அடைதல் மூலம்   உலகத்தில் எதையும் அடையலாம்.  தன்னுடைய மரணத்தை தள்ளி போடலாம்.  தான் இருக்கும் இடத்தில்  இருந்துகொண்டு பலநூறு கி/மி தூரத்தில் உள்ள இடத்தில் தற்போது என்ன நடக்கின்றது என்று மனகண்ணால் பார்க்கலாம். ஒருவர் இந்த ஜென்ம வாழ்க்கையில் ஏற்படும் கஸ்டம் நஸ்டங்களுக்கு வாழ்க்கை நிலைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்மனதில் பேசும் போது கண்டு அறியலாம் அதை ஆழ்மனதில் இருந்து அழிக்கும் போது அதன் பின் அவரின் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என்பது உண்மை.  ஒருவர் தன் தாயின் கருவில் குழந்தையாக இருக்கும் போது கூட மனபாதிப்பு ஏற்பட்டு மனநோய் பிரச்சனகள் ஏற்படலாம், வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம் அதையும் அறிந்து சரிசெய்யலாம். மேலும்   போன் ஜென்மத்தில்  அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்று அறிந்து அதன் படி அவரின் அந்த கெட்ட பாதிப்புகள் பதிவுகளை ஆழ்மனதில் இருந்து அழித்து  வாழ்க்கையை சரி செய்யலாம். 
இந்த ஹிப்னாடிசம் மூலம் காவல் துறைக்கு கடுமையான வழக்குகளில் உண்மை கண்டு அறியும் சோதணை செய்து உதவலாம்  நான் திருச்சியில் நடந்த ஒரு முக்கியமான நபரின் கொலையில் 26 நபர்களுக்கு உண்மைகண்டறியும் சோதனை செய்து காவல் துறையிக்கு உதவி இருக்கிறேன் அந்த வகையில் தமிழ் நாட்டில் உண்மைகண்டறியும் சோதணைசெய்யும் ஒரே நபர் என்று பெயர் பெற்றுள்ளேன்.

No comments:

Post a Comment