Wednesday 30 January 2019


பகுதி 14
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

ஹார்ட் அட்டாக் பயம்
திருப்பூரில் இருந்து ஒரு ரோட்டரி கிளப்பின் தலைவர் ஒருவர் பெயர் வேண்டாம் தன்னிடம் சிகிச்சைக்காக வந்தார்..  பல பெரிய  மருத்துவர்களை  பார்த்து பல வகையில் சிகிச்சை செய்தும் எந்தவித பயனும் இல்லை  மனதில் ஒரு வகையான பயம் இருந்து கொண்டு இருக்கின்றது.  தான்  ஒரு மிகபெரிய கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும். பணத்துக்கு எந்த விதகுறைவும் இல்லை. பல இடங்களில் மிக பெரிய கட்டிடங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. பலஊழியர்கள் வேலையில் உள்ளனர் இருந்தாலும் நான் நேரடியாக பார்த்தால் தான் தனக்கு நிம்மதி என்று தினமும் பல கி.மி தூரம் பயணம் செய்து மேற்பார்வையிடுவதாக சொன்னார்.. காரில் பயணம் செய்யும்போது எங்கே தனக்கு மாரடைப்பு வந்துவிடுமோ ஹார்ட்அட்டாக் வந்து விடுமோ என்று பயம், அதனால் தான் இறந்து விடுவோமோ என்கின்ற தொடர்பயம் அதனால் தினமும் காரில் பயணிக்கும் போது தன்னால் நிம்மதியாக பயணம் செய்யமுடியவில்லை என்றார். தொடர்ந்து அவரை பற்றி விசாரித்த போது ஒருமுறை தான் காரில் கோயிலுக்கு தன் குடும்பத்துடம் சென்று கொண்டு இருக்கும் போது திடீரென தன் நெஞ்சு கடுமையாக  வலிப்பதாக உணர்வு ஏற்பட்டபோது கோயிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு உடன் மிக பிரபலமான ஆஸ்பத்திரிக்கு சென்று தனக்கு நெஞ்சு வலிக்கின்றது என்று காட்டியபோது அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் எல்லா சோதனைகளையும் செய்து பார்த்து விட்டு தங்களுக்கு வந்தது லேசான மார்பு வலி அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி இருக்கின்றனர். இருந்தலும் அவருக்கு மனதில் ஏற்பட்ட பாதிப்பு தனக்கு நெஞ்சுவலி வந்து தான் இறந்து விடுவோமோ என்ற பயம் ஆழ்மனதில் பாதிப்பாக ஏற்பட்டுவிட்டது..
அதற்கு தகுந்தாற் போல்  அவரது நண்பர் ஒருவருக்கு ஹார்ட்அட்டாக் வந்து தான் பலலட்சம் செலவு செய்து கஸ்டபட்டு பிழைத்துவந்தேன் அடுத்தமுறை வந்தால் ஆபத்தானது என்று டாக்டர்கள் எச்சரித்ததாகவும் அதனால் மிகவும் கவனமாக இருப்பதாகவும், அதனால்  புகை, மது தற்போது பயன்படுத்துவது இல்லை ,மேலும் சாப்பிடுவது முதல் மிகவும் கட்டுபாட்டுடன் இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார். அடுத்தமுறை ஹார்ட்அட்டாக் வந்தால் பிழைப்பது கஸ்டம் பிறகு மரணம் தான் முடிவு என்று இவரிடம் நண்பர் சொன்னது இவருக்கு மேலும் பயத்தை உண்டுபண்ணியது.. இதனால் கடுமையாக மனரீதியாக பாதிக்கபட்டார். இந்த பயத்தை வெளியில் சொல்லி ஆறுதல்தேட முடியவில்லை. அடுத்தவர் தன்னை தவறாக நினைத்து கொள்வார்கள் என்ற அடுத்த பயம். இந்த பயம் ஆழ்மனதில்பதிந்து. தினமும் காரில்பயணம் செய்யும்போது தனக்கு தாங்கமுடியாத படபடப்புடன் பயணம் செய்கின்றேன் என்றார்..

மேலும் தான் இறந்து விட்டால் தன் குடும்பத்தை பார்ப்பதற்கு வேறு ஆள் இல்லை என்றும் பலஇடங்களில் பெரிய கட்டிடங்கள் வேலை நடைபெற்றுகொண்டு இருக்கின்றது.  அதை சரியாக முடிக்கவேண்டும் என்ற கவலை உள்ளது என்றார்.  அவருக்கு சிறுகுழந்தைகள் உள்ளதாகவும் அவர்களை படித்து நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.    அவருக்கு சுமார் ஒருமணி நேரம் நெஞ்சுவலியைபற்றி ஆலோசனை சொல்லி நெஞ்சுவலி எல்லாம் ஹார்ட்அட்டக் அல்ல நெஞ்சுவலி வந்தவர் எல்லாம் இறந்து போகமாட்டார்கள் நெஞ்சு வலியில் பலவகை உள்ளது. நுரையீரல் பிரச்சனை இருந்தாலும் நெஞ்சுவலிக்கும்  மார்பு தசை பகுதியில் வலி ஏற்பட்டாலும் நெஞ்சு வலிக்கும், சிலருக்கு சாதாரணமான சளி பிடித்தாலும் கூட நெஞ்சு வலிக்கும். அதனால் நெஞ்சுவலி எல்லாம் ஹார்ட்அட்டாக் அல்ல எல்லோரும் இறந்து விடமாட்டார்கள். என்று ஆலோசனை கூறி அவரை ஆழ்ந்ததூக்க நிலைக்கு அழைத்துசென்று அவரின் ஆழ்மனதுக்கு தேவையான பரிந்துரைகள் கொடுத்து தூங்கவைத்து ஆழ்ந்த நிலையிலிருந்து தன்னிலைக்கு கொண்டு வந்த போது அவரின் மனம் வெகுவாக மாறி மெண்மையாக இருந்ததாக  கூறிசென்றார். தற்போது மனம் லோசாக இருக்கின்றது. என்றார். அவர் முகத்தில் இருந்த பிரகாசம் சிறிது நேரத்தில் ஏற்பட்டமாறுதல் அவர் பயத்தில் இருந்து வெளியே வந்தது தெரிந்தது

No comments:

Post a Comment