Wednesday 30 January 2019


பகுதி 16
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

பூர்வீக சொத்து:
கோவையில்  இருந்து தன்  தாயாரை அழைத்துகொண்டு  எனது சிகிச்சை  மையத்துக்கு வந்த  மகளுக்கு முன்ஜென்மநிகழ்வு பற்றி அறியஆர்வம் கொண்டு  ஆழ்ந்த தூக்க நிலைக்கு  சென்ற  போது அந்த  பெண்ணின் ஆழ்மனதோடு  பேசியபோது  போன  ஜென்மத்தில் அவர் ஒரு காட்டுவாசியான பெண் போல் இருந்தாக சொன்னார். அங்கு  தனக்கு  திருமணம்  நடந்து ஒருகுழந்தை  இருப்பதாகவும் கூறினார்.  அங்கு உள்ளவர்களுக்கு  மான் வேட்டை செய்வது பிடிக்கும்,  என்றும் ஆனால்  தான் மான் மாமிசம் சாப்பிடமாட்டேன் என்றும்  மீன் மட்டுமே பிடிக்கும்  என்றார். ஒரு நாள்  தன்  கணவர் இறந்து விட்டதாகவும் அதனால் தானும், என்னை சார்ந்த  எல்லோரும் அழுவதாகவும்  கூறினார்.
 பிறகு  அதற்கு  முந்திய ஒரு ஜென்மத்தில்  அவர் ஒரு  பிராமண ஆண் ஆக  பிறந்து  உள்ளதாகவும், தனக்கு 13  வயதில் திருமணம் செய்து வைத்து விட்டதாகவும்,  அப்போது பாட்டி தன்னை திட்டி அடித்தது,  மேலும் தனக்கு அழகான பெண்  குழந்தை பிறந்து  உள்ளதாக சொன்னார்.   அந்த பெண் மிக அழகாக இருப்பதாக கூறினார்.  தன் குழந்தையை  படிக்க வைக்க  வேண்டுமென்றும்  பெற்றோர்களிடம் சண்டை போட்டதும்  அதற்கும் பெற்றோர் மறுத்ததும் வேறு வழியின்றி அந்த  பெண்ணுக்கும்  குழந்தை திருமணம் நடந்ததாக கூறினார்.  அந்த பெண்ணுக்கும்  ஒரு பெண் குழந்தை பிறந்தது.  அந்த பேரக் குழந்தையையாவது   படிக்கவைக்க வேண்டும்  என்று  ஆசைபட்டார்.  ஆனால் அந்த பேரக் குழந்தையையும்  சிறுவயதில் திருமணம் செய்து படிக்கவைக்க முடியவில்லை என்றார்..  .
ஒரு முறை  தன் மகளையும்,  பேரக்குழந்தையையும்  பார்க்க சென்றபோது அந்த வீட்டின்  வாசல்படி ஏறும்போது  வழுக்கி விழுந்து,  அங்கேயே படியில் இறந்து போனதாகவும்  கூறிவருத்தம்  அடைந்தார் .அப்போது அவர் மனைவியும்  தன் மகளும்,  கதறி அழுதது கஸ்டமாக  இருந்தது. என்றும் சொன்னார்.
பிறகு  அதற்கு முந்தய  ஜென்மத்தில்  தான்  ஒரு பிரமிடு அருகில் நிற்பதாகவும்  தன்னை ஒரு  சிலர் வந்து பல்லக்கு போன்ற வாகனம் ஒன்றில்  ஏற்றிசென்று  இது தான் உன் மாளிகை, இதை பலர் அபகறிக்க நினைக்கின்றார்கள்  இதைவிட்டு வெளியே வராதே  என்று சொல்லி அங்கு விட்டு சென்றனர்.  இது உன்னுடைய பூர்வீக சொத்து ஆகும்  இதை விட்டு விடாதே என்று சொல்லிசென்றனர்..   பிறகு அந்த பூர்விக சொத்தில் கடைசி வரை வாழ்ந்து  திருமணம் கூட செய்யாமல்,  பூர்வீக சொத்தை காப்பாற்றி  90 வயது  வரை வாழ்ந்ததாக  கூறினார். 
அந்த பெண்ணை தன்னிலைக்கு  வரவைத்து  அவரிடம் பேசிய போது  எப்படியாவது தன் இரண்டு பெண் குழந்தைகளை  நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. தற்போது இருவரும் படித்து கொண்டு உள்ளனர் என்றார். . மேலும் அவர்களது பூர்விக சொத்து வீடு ஒன்றை சிலர் ஏமாற்ற முயற்சி நடப்பது போன்ற நிகழ்வு சொன்னபோது  ஆச்சர்யம் அடைந்து உண்மையில்  அப்படி ஒரு சம்பவம்  நடந்துகொண்டு  இருக்கிறது என்றார்.  அப்போது நான் அந்த  பூர்வீகசொத்து உங்கள்  கையைவிட்டு  போகாது, என்று சொன்னபோது  மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.   நீங்கள் அந்த வீட்டில் கடைசிவரை  வாழ்வீர்கள் என்று  சொன்ன போது மிக்க சந்தோஸம் கொண்டார்

No comments:

Post a Comment