Wednesday 30 January 2019


பகுதி  6
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

ஆழ்மனபாதிப்பின் வெளிப்பாடுதான் மனநோய்கள்.  அதாவது முதலில் பயம் மறதி கோபம், தூக்கம், கனவு தற்கொலை, திக்குவாய், பக்கவாதம் போன்ற நோய்களாக வெளிப்படும்.  முதலில் வருவது பயம்  எதை பார்த்தாலும் பயம் வாகணத்தில் செல்ல பயம், நீரை பார்த்தால் பயம், தீயை பார்த்தால் பயம், இருட்டை பார்த்தால் பயம் சாப்பிட பயம், படுத்தால் பயமின்னும் இது போல் பலநிலைகளில் தொடர்ந்து பயம் ஆட்டிபடைக்கும்.   சிலருக்கு தனக்கு எதாவது நடந்துவிடுமோ என்ற ஆதீத பயம் ஏற்படும். அதாவது தனக்கு மரணம் வந்துவிடுமோ என்ற  மரண பயம் ஏற்படும். ஆனால் அதை வெளீயில் காட்டிகொள்ளமாட்டார்கள். 
மறதி  எதை பார்த்தாலும் கேட்டாலும் மறந்துவிடுவது, எந்த பொருளை வைத்தாலும் மறந்துவிடுவது, தனது வீடு இருக்கும் தெரு கூட மறந்துவிடுவது, 
இரவில் படுத்தால் தூக்கம் வராது சில நாட்கள் அதை சமாளித்துகொள்வார்கள் அதுவே தொடரும் போது காலையில் எழுந்ததும் இன்ம் புரியாத கோபம் வரும். தான் என்ன பேசுவது என்றே தெரியாமல் தேவயற்ற நிலையில் கோபம வரும்.  தனக்கு தேவையற்ற முறையில் கோபம் வருவது கோபம் வந்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் கண்டபடி பேசுவது இதுவரையில் பேசாத கெட்டவார்த்தைகள் பேசுவது, தீட்டுவது,,  பொருள்களை போட்டு உடைப்பது தூக்கி வீசுவது,  குழந்தைகளை போட்டு அடிப்பது, பக்கத்துவீட்டுகாரர்களிடம் சண்டை போடுவது, தேவையற்ற டென்சன் ஆவது.  இரவில் தூங்கும் போது பயங்கரமான கனவு வருவது, தூங்கும் போது கனவு வந்து தூக்கம் கெடுவது, ஆண்களுக்கு மனரீதியாக ஆண்மை குறைவு ஏற்படுவது, இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தூங்க முயற்சி செய்வது ஆனாலும் தூக்கம் வராமல் இருப்பது.  ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால் அவருக்குமனநோய் பாதிப்பு இருக்கின்றது என்று அர்த்தம். அதற்கு மாத்திரை சாப்பிட்டு  தூக்கத்தை வரவைத்தால் அதை விட கொடுமை வேறு இல்லை.  தூக்கத்துக்கு மாத்திரை தேடினால் பிறகு தூக்கத்துக்கான யாத்திரை ஆகிவிடும்.    ஒரு மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வருவது போல் இருக்கும் ஆனால் அதையே பல மாத்திரை சாப்பிட்டால்  நிரந்தரமாக நம்மை தூக்க வருவார்கள்.  தூக்கம் இல்லை என்றால் துக்கம் வரும் துக்கம் வந்தால் தூக்கம் வராது.
நல்ல குடும்பத்து பெண்களுக்கு ஏற்பட்ட காதல் பிரச்சனையால் வரும் பாதிப்புகள்.   காதல் தோல்வியால் வரும் பாதிப்பு, கணவன் மனைவியால் ஏற்படும் இழப்புகள், பிரிவு, சந்தேகம், கள்ளதொடர்புகள் போன்ற பிரச்சனைகள். மனரீதியான பாதிப்புகள் ஏற்படும் போது  தான் எதற்க்காக வாழ வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தல், தற்கொலை எண்ணம் வந்து வாட்டுவது,   தான் எதற்க்காக வாழ வேண்டும் எல்லா வசதிகள் இருந்தும் வாழ பிடிக்காத நிலை,  மேலும் பயத்தின் மிகபெரியபாதிப்பாக  பேசும் போது திக்கிதிக்கி பேசுவது, பேச்சில் தடை ஏற்படுவது  இவைகள் பயத்தின் அதிகபட்ச மான வெளீப்பாடுகள் இந்த திக்கு வாய் பேச்சுக்கு உலகத்தில் WHO  குறிப்பின் படி எந்த வகையான மருந்து மாத்திரை சிகிச்சை இல்லை என்பது தான் உண்மை.ஆழ்மனதில் ஏற்பட்ட பயத்தின் வெளிப்பாடுதான் திக்கிதிக்கி பேசுவது.
சிலருக்கு வருடகணக்கில் தலைவருவது மைக்ரேன் தலைவலி  ஒற்றை தலைவலி, வருட கணக்கில் வயிற்று வலி வருவது இவர்களூக்கு எந்த வகையான மருத்துவ பரிசோதணை செய்தாலும் எல்லாம் நன்றாக இருக்கும் ஆனாலும் தொடர்ந்து உடம்பில் நோய் இருந்துகொண்டு இருக்கும் எத்தனை வருடம் மனநோய்க்கான மாத்திரை, வலிக்கான மாத்திரை சாப்பிட்டாலும்    சரியாகாது. பலர் தலைவலியாலும், வயிற்றுவலியாலும்  தற்கொலை செய்வதை கேள்விபட்டு இருப்பீர்கள்.  இவர்களுக்கு எந்த வித சிகிச்சையும் பயன் தராது.  இவர்களுக்கு ஏற்பட்டு இருப்பது மனரீதியான பிரச்சனையாள் வந்த நோய்கள் தான் இவைகள்  இவர்களுக்கு மனதுக்கு சிகிச்சை கொடுத்தால் மட்டுமே குணப்படுத்த முடியும்.
மேலும் சில காரணங்களை பாருங்கள் 
என் கணவர் குடும்பத்தை கவனிப்பது இல்லை, அக்கறை இல்லை. என்பையன் சரியாக படிக்கவில்லை, மக்கா இருக்கான் சோம்பேரியாக இருக்கான், மண்டைல ஒன்னுமே ஏறமாட்டேங்குது, எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் மனசே சரி இல்லை நிம்மதி இல்லை, கோபம் கோபமா வருது எதையாவது போட்டு உடைக்கனும் போல் இருக்கு, யாரையாவது அடிக்கலாம் போல்  இருக்குத் .  மண்டைபிச்சிக்க்னும் போல் இருக்குது, 
அரசியல் தலைவருக்காக தீக்குளித்தல், நடிகருக்காக வீட்டை மறந்து செல்லுதல், எதிர் கால வாழ்க்கை வாழ பயமா இருக்கு, பக்கத்துவீடுகாரரிடம் சண்டை போடுவது, மாமியார் மருமகள் சண்டை, அப்பா மகன் சண்டை, கடந்த காலத்தில் நடந்த சம்பவம் பற்றி அடிக்கடி நினைத்து பாரத்து வருந்துவது,  எரிச்சலா எரிச்சலா வருவது, தேவையற்ற வதந்திகளை பரப்புவது   நல்ல வசதி இருந்தும் கெட்ட நபர்களீடம் நட்பு கொண்டு சுற்றுவது, தாயால் புரக்கண்க்கபட்ட குழந்தையின் மனநிலை  தாய் தந்தை மீது பாசம் இல்லாத குழந்தை, தாயால் வெறுக்கபட்ட குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், கணவன் இறந்த துக்கம் தாங்கமல் இருக்கும் மனைவிக்கு உடல் முழுவது எரிச்சல் ஏற்படுவது, உடலில் பூச்சி ஊர்வது போல் இருப்பது, காதில் யாரோ பேசுவது போல் இருப்பது, காதில் பேசும் குரலுக்கு பதில் கொடுப்பதாக நினைத்து தானியாக பேசுவது, தன்னை மற்றவர்கள்  கொலைசெய்வதாக நினைப்பது,  செய்வினை வைத்துவிட்ட்தாக நினைப்பது,  தொடர்ந்து பல மணி நேரம் குளிப்பது, பல் தேய்ப்பது, கைகாள்கள் கழுவுவது,  அடிக்கடி கைகளை கழுவுதல், தன்னை தூரத்தில் இருந்து சேட்டிலைட் மூலமாக வேவு பார்த்தல் என்பது, தன்னை கொலை செய்ய சதி செய்வதாக சொல்வது,  
படிக்காத மாணவர்கள் , குறுப்பு செய்யும் மாணவர்கள்,  படிக்கின்ற காலத்தில் ஏற்படும் செக்ஸ் எண்ணங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் சொல்லிகொண்டு போகலாம். இது போன்ற   பிரச்சனைகளுக்கு மனநோய்களுக்கு எப்படி சிகிச்சை கொடுப்பது. நன்றாக சிந்தித்துபாருங்கள் எந்த மருந்து மாத்திரை கொடுத்து சரி செய்ய முடியும். இது போன்ற மனநோய்களுக்கு பிரச்சனைகளுக்கு பொதுவாக தூக்க மாத்திரைகள் கொடுத்து  தூங்க வைத்துவிடுவார்கள்.  மாத்திரையின் சக்தி மூளையை பாதித்து செயல்படாமல் மந்த நிலைக்கு சென்று விடும்.  மேலும் மனபாதிப்பு ஏற்பட்டவர்கள் அதனால் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துவிடுவார்கள்   அதனால் அவர்களின்  உறவினர்கள் மாத்திரை நன்றாக வேலைசெய்கின்றது என்று நினைத்து கொள்வார்கள்   பாவம் அந்த மாத்திரையால் அந்த நபருக்கு எத்தனை பாதிப்பு என்று அவருக்கு மட்டுமே தெரியும். அதை வெளியில் சொல்ல மாட்டார்கள்.  சொல்லமுடியாது. இது போன்று பிரச்சனைகளுக்கு  எவ்வாறு சிகிச்சை கொடுத்து எப்படி குணமாக்குவது.  குணமாக்கும் சிகிச்சை அடுத்த பதிவில் பார்ப்போம்.  



No comments:

Post a Comment