Wednesday 30 January 2019


பகுதி 11
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

கற்பு போனது:
கோவையிலிருந்து 14 வயது பெண் ஒருவரை  அவரது சகோதிரியும்,அவரது கணவரும் அழைத்து கொண்டு வந்தார்கள்.. தான் 8 வகுப்பு  படிப்பதாகவும் வீட்டில் மிகுந்த கோபத்துடன் கண்ட கண்ட பொருட்களை போட்டு உடைப்பதாகவும், தேவையின்றி சிரிக்கின்றார்,  திடீரென அழுகின்றார்.  சில நேரம் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுகின்றார். அவரை தேடி சென்று கண்டு பிடிக்கவேண்டி இருக்கின்றது, சொல்வதை எதுவும் கேட்க மறுக்கிறாள் என்று அழைத்து வந்தார்கள். சிறிய வயதான அந்த பெண்ணுக்கு ஏற்பட்டசோதனை மிகவும் கொடியது கேட்பதற்கு மனம் மிகவும் கஸ்டமாக இருக்கின்றது. அந்த பெண்ணுடன் வந்தவர்களை வெளியே உட்கார சொல்லிவிட்டு தனியாக பேசியபோது அந்த பெண் நான் பேசிய விதம் கண்டு என்னை நம்பி தனக்கு ஏற்பட்ட அத்தனை பிரச்சனைகலையும் சொல்லிவிட்டார் அதனால் தான் தனக்கு இந்த மாதிரி உள்ளது என்றார். அவர் என்ன சொன்னார் ?.
அந்த பெண்ணுக்கு 5 வயதாக இருக்கும் போது தன்னை ஒரு உறவினர் கெடுக்க முயற்சி செய்ததாகவும் அதில் இருந்து தப்பி தன் பெற்றோர்களிடம் சொன்னபோது அதை பற்றி ஏதும் அவர்கள் நம்பாமல் ஒன்றும் செய்ய வில்லை. அது போல் மேலும் ஒருமுறை நடந்தபோது நான் சொல்வது பொய் என்றும் பேசாமல் இரு என்று தன்னை மிரட்டி இருக்கசெய்தனர். தனக்கு 13 வயதாகும் போது பருவத்துக்கு வந்த சிலமாதங்களில் தன்னுடை வகுப்பு தோழியின் வீட்டுக்கு சென்றுவந்த போது அந்த தோழியின் அண்ணனுடன் தான் காதல் உள்ளதாக சொல்லி தன்னை அடிஅடி என்று அடித்து சிரமப்படுத்தினர். என்னையாரும் நம்பவில்லை, ஒரு முறை தன்னை வீட்டைவிட்டு வெளியேவிட்டு கதவை பூட்டிகொண்டு எல்லோரும் வீட்டினுள் படுத்துகொண்டனர்.
நீண்ட நேரம் கழித்து தனது சகோதரி வீட்டில் சென்று படுத்துகொண்டதாக சொன்னார். மேலும் அந்த சகோதரியின் கணவன் ஒரு முறை தன்னை பலாத்காரம் செய்து தன்னை கெடுத்துவிட்டார்.  இதனால் எந்த ஆண்களை பார்த்தாலும் அவர்கள் கெட்டவர்கள் அதனால் ஆண்களை பிடிக்காமல் போனது என்றார்.   இதனால் தன்னால் படிக்க முடியவில்லை, யாருடனும் பேசமுடியவில்லை, நிம்மதியாக தூங்க முடியவில்லை  எல்லோர் மீதும் கோபமாக வருகின்றது. என்றார்..  மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்த போது அந்த பெண்ணின் மனநோய்க்கு காரணம் அவர்கள் வீட்டில் உள்ள மற்ற நபர்கள், மற்றும் பெற்றோர் என்பது தெரிய வந்தது 
அந்த பெண்ணுக்கு எவ்வாறு மனதுக்கு ஆறுதல் சொல்வது என்று முடிவு செய்து அந்த பெண்ணை ஆழ்ந்ததூக்க நிலைக்கு கொண்டுசென்று அவரின் ஆழ்மனதுக்கு ஆறுதல்   கூறி மனதுக்கு இதமான வார்த்தைகள் சொல்லி ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல உன்னிடம் நடந்து கொண்டவர்கள் கெட்டநடத்தை உள்ளவர் அதனால் எல்லா ஆண்களும் கெட்டவர்கள்அல்ல என்றும் நல்லவர்கள் சிலர் உன் அருகில் இருக்கின்றார்கள் அவர்கள் உனக்கு எப்போதும் உதவி செய்வார்கள் என்றும்  சொல்லி ஆழ்மனதுக்கு பரிந்துரைசெய்யப்பட்டது. மேலும் நன்கு படிப்பதற்காக ஞாபகசக்தி அதிகமாக நல்ல கருத்துக்கள் பதிவுசெய்யபட்டது.  ஆழ்மனதில் உள்ள கெட்டபதிவுகள் அழிக்கபட்டது.      


No comments:

Post a Comment