Wednesday 30 January 2019


பகுதி 2
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

மனநோய் தீர்ப்பது சிகிச்சை கொடுப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன்பாக ஹிப்னாடிசம் என்றால் என்ன ? என்று பார்ப்போம்.
ஹிப்னாடிசம் என்பது ஒரு கிரேக்கமொழியில் இருந்து வந்த வார்த்தை இதன் அர்த்தம் தூக்கம் என்பதாகும் அதாவது ஹிப்னாடிசம் செய்தால் ஒருவர் தூங்குவது போல் இருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது.  ஹிப்னாடிசம் என்பது அறிவுக்கூர்மையை பயன்படுத்தி செய்ய கூடிய மனம் சார்ந்த மருத்துவம் சார்ந்த அற்புதமான தெய்வீகமான கலை ஆகும் இதை எல்லோராலும் கற்றுகொள்ளமுடியாது இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே பேச கற்றுகொள்ளமுடியும் அற்புதமான கலை ஆகும்.  ஒருமனிதரை ஆழ்ந்த தூக்க நிலைக்கு கொண்டு சென்று அவரின் ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்று எளிமையாக கண்டுபிடிக்க முடியும்.  ஒருவருக்கு மனது சரி இல்லை என்றால் கோயிலுக்கு போனால் மனது சரியாகும் மேலும் தூங்கி எழுந்தால் மனது சரி விடும் என்பது ஒரு கருத்து அதனால் தூக்கம்  கோயில் மனதுக்கும் ஒரு தொடர்பு உள்ளது தெரியவரும் அதனால் இந்த கலைக்கு இறை நிலை சார்ந்த கலை என்று பெயர் வைத்துள்ளேன். இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதாவது முதலில் மனது பாதிக்கபட்டால் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி  மந்திரித்து கயிறு கட்டுதல் திருநீறு பூசுதல்,  போன்ற செயல்களை செய்கின்றோம் அதாவது மனதை சரி செய்ய கூடிய சக்தி இறைவனுக்கு மட்டுமே இருக்கிறது என்று மனது நம்புகிறது.
இறைவன் கொடுக்கிற தூக்கம் இயற்கையான தூக்கம் மனிதன் கொடுக்கிற தூக்கம் மகத்துவமான தூக்கம் அதை இறைவனே மனிதனுக்கு கொடுக்க முடியாது. அந்த அற்புதமான தூக்கம் தான் ஹிப்னோ தூக்கம். இதை ஆழ்மனதை அடைந்தவர்கள் மட்டுமே உணரமுடியும் அறிய முடியும். எல்லோராலும் அடைய முடியாது அதனால் இந்த தூக்கத்துக்கு மறைமலை அடிகள் யோக நித்திரை என்றும்  அறி துயில் என்றும் பெயர் வைத்தார். இந்த தூக்கம் தூங்க்குவதற்கு அதிர்ஸ்டம் செய்து இருக்க வேண்டும் என்று அறிதான தூக்கம் என்றும் பெயர் வைத்தார். மேலும் இதன் அர்த்தம் அறிவு சார்ந்த தூக்கம் இறைவன் அருள் சார்ந்த தூக்கம் என்றும் பெயர் நான் வைத்துள்ளேன்.
சட்டத்தால் மனிதனை மட்டுமே வளைக்க முடியும் ஆனால் அவன் மனதையும் வளைக்கும் சக்தி ஹிப்னாடிசாத்துக்கு இருக்கிறது.
ஓடுகிற வண்டிக்குள் இருந்துகொண்டு ஓடாமல் இருப்பவனே மனிதன்.
இல்லாத பிரச்சனையை இருப்பதாக நினைத்துகொண்டு நமக்கு வரும் வெற்றியை நாமே கொடுத்துகொள்கின்றோம்
மனதில் இருந்து தான் எண்ணங்கள் தோன்றுகிறது அது மூளையின் வழியாக செயல்படுகிறது அதனால் மூளை சில நேரத்தில் திட்டு வாங்குகிறது மூளை இருக்கா அறிவு இருக்கா என்று.
மரணத்தையும் தள்ளி போட கூடிய சக்தி வாய்ந்தது தான் ஹிப்னாடிசம் என்பது
விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழியாகும் இதில் விதி என்றால் என்ன ? மதி என்றால் என்ன ? இதை யாரும் விளக்க முடியாது.  எதிர்பாராமல் நடக்கும் நல்ல காரியங்கள் செயல்களுக்கு பெயர் அதிர்ஸ்டம் எதிர் பாராமல் நடக்கு கெட்ட காரியங்களுக்கு செயல்களுக்கு பெயர் தான் விதி என்பது.  நாளை மறுநாள் அடுத்த மாதம்  அடுத்த வருடம் நமக்கு என்ன நடக்கும் என்று தெரியாது நடக்கும் கெட்ட காரியங்களுக்கு பெயர் தான் விதி என்பது தெரியாத ஒன்றை எப்படி மதியால் அதாவது அறிவால் வெல்வது என்பது முடியாது.  அந்த விதியையும் வெல்ல கூடிய அறிவு தான் ஹிப்னாடிசம் என்பதாகும். மரணத்தை தள்ளிபோட கூடிய சக்தி அடுத்த பகுதியில்.


No comments:

Post a Comment