Wednesday 30 January 2019


பகுதி 19
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

வசதியான வாழ்க்கை:
கோவையிருந்து  மிக வசதியான  பெற்றோர்கள் தன்மகனை அழைத்துகொண்டு  சிகிச்சைக்காக  வந்தார்கள்,  தன் மகன்  எம்.பி.  படித்துள்ளதாகவும்  ஆனால்  நல்ல வேலை  கிடைக்கவில்லை.  ,ஒருசிறிய  தனியார் நிறுவனத்தில் ருபாய் 5000/ க்கு சம்பளத்தில்  வேலை செய்வதாகவும்  அவருக்கு 150  பவுன் நகைபோட்டு 2 வருடத்துக்கு முன்பு  திருமணம் வெகு ஆடம்பரமாக  நடந்தது. தற்போது  ஒரு குழந்தை உள்ளது  மனைவி மருத்துவ துறையில் இருப்பதாகவும்  கூறினார்.  தற்போது அவர்  மகன் சின்னசின்ன திருட்டுக்கள்,  செய்து   அதாவது  வீட்டில்  இருந்து சிறிய நகைகளை திருடி அடமானம்  செய்து செலவு  செய்வதாகவும், இந்த ஒரு வருடத்தில்  1 லட்சம்  ருபாய்க்கு மேல் இது  போன்று செலவு செய்ததாக  கூறினார்.   பெற்றோருக்கு பயம் தன் மகனை   யாரோ    கட்டுப்படுத்தி வசியப்படுத்தி பணம் பிடுங்குகிறார்கள், அதற்கு  பயந்து வெளியில் சொல்ல முடியாமல்  இருப்பதாக  நினைத்தார்கள்.  தற்போது மகனுக்கும்  மருமகளுக்கும்,  பிரச்சனை ஆகி  விவாகரத்து வரை போய்விட்டது. என்றும் சொன்னார்கள்.
 இந்த நபருக்கு  ஹிப்னாடிசம் மூலம்  சிகிச்சை அளிக்கும்  போது  ஆழ்ந்ததூக்கத்துக்கு  கொண்டுசென்று  அவரின் ஆழ்மனதோடு  பேசும்போது  அவருக்கு  எந்தவித கெட்டபழக்கமும் இல்லை,  எந்த வித நபரின் கட்டுபாட்டில்  இல்லை என்றும்  தான்வேலைக்கு போவது,  சம்பளம் வாங்குவது  தன் செலவுக்கு  போதுமானதாக இல்லை,  என்றும் அதனால்  இது போன்ற திருட்டு சம்பவங்களில் செய்வதாக  கூறினார். ஆனாலும் இவரின் கட்டுபாட்டில் தான் அவருடைய நகைகள், மற்றும் மனைவியின் நகைகள் மொத்தம் சுமார் 200 பவுன்கள்  இருப்பதாக சொன்னார். தான் சிறிய மோதிரம், கம்மள் வளையல் போன்ற சிறிய நகைகளை தான் எடுத்து அடமானம் வைப்பதாக சொன்னார்..
மேலும்  அவரை முன்ஜென்மத்து நிகழ்வுக்கு  கொண்டு சென்று ஆழ்மனதில் உள்ள பதிவுகளை கேட்ட போது  அவர் சீனாநாட்டில்  மிகபெரிய  பணக்காரர்  வீட்டு குடும்பத்தில்  மகனாக  பிறந்து வளர்வதாகவும்  மிகபெரிய  வசதிவாய்ப்புடன்  வாழ்ந்து வருவதாகவும்  சொன்னார்.   20  வயது ஆகும் போது தான் காதலித்த பெண்னை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாகவும்  தான்  பெரும் பணக்காரர்  என்பதால் எந்த வேலையும்  செய்யாமல் இருந்ததாகவும் ,செலவுக்கு தேவையான பணம்  வீட்டில்  நானே எடுத்து கொள்வதால், மேலும் வீட்டில் உள்ளவர்கள் கொடுப்பதால்  செலவுக்கு பஞ்சமில்லை என்றும் வசதிக்கு குறைவுஇல்லை மிகவும் ஆடம்பரமாகசெலவு செய்து சந்தோஷமாக வாழ்ந்துவருவதாகவும், . தன் மனைவியோடு  80  வயது வரை  வாழ்ந்ததாகவும் கூறினார், அவரின்  பெற்றோரிடம் பேசியபோது  இவர் இந்த மாதிரி  தவறு செய்வதைவிட்டு வீட்டோடு  இருந்தாலே  நாங்கள்  அவருக்கு தேவையான  செலவுக்கு பணம்  கொடுத்துவிடுவோம். என்று சொன்னது,  அவர் போன  ஜென்மத்தில் எந்த  வேலையும் செய்யாமல்  ஆடம்பரமாக  செலவுசெய்ததும்.  இந்த ஜென்மத்தில்  அவர்  பெற்றோர் செலவுக்கு பணம் கொடுக்கின்றோம்  என்றும் ஜாலியாக செலவுசெய்து வீட்டில் நன்றாக இருந்தால் போதும் அவரின் மனைவி வீட்டிலும் நல்லவசதி என்றும் சொன்னார்கள். இது முன்ஜென்மத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு எந்தஅளவு பொருத்தமாக இருந்தது என்று தெரிகின்றது. அதாவது அவர்கள் பெற்றோர்கள்  சொல்வதும்  எவ்வளவு உண்மையாகின்றது . போன  ஜென்மத்தில்  நடந்த நிகழ்வுகள்  எந்த அளவு  அதன்  தொடர்ச்சியாக தொடர்கின்றது. என்பதும்  உண்மையாகின்றது
அவர்களது    பெற்றோர்கள்  தன்மகனுக்கு  விவாகரத்து ஆகிவிடுமா  என்று  பயந்து கொண்டு கேட்ட போது அப்படி ஒன்றும் நடக்காது  என்றும், போன ஜென்மத்தில் அவர் தன் மனைவியுடன் 80  வயது வரை வாழ்ந்தார்  என்றும் சொன்ன போது மிக்க சந்தோஸத்துடன் நிம்மதியான மனத்துடன் ஏற்றுகொண்டனர்.  பிறகு அந்த  நபருக்கு திருடுவது  அடமானம் வைப்பது தவறு  அந்த மாதிரி செய்வது  அவமானகரமான  செயல்  அது போன்று செய்யகூடாது என்றும் மேலும் சில நல்ல பதிவுகள் ஆழ்மனதில் பதிவு செய்து சிகிச்சை கொடுத்து அனுப்பிவைத்தோம்


No comments:

Post a Comment