Wednesday 30 January 2019


பகுதி 20
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

.பெண்ணுக்குள் பெண்:
.தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒரு (பெண் பெயர் வேண்டாம் )சிகிச்சைக்காக அவரது பெற்றோர் அழைத்து வந்தனர். தான் ஒருகல்லுரியில் முதுகலை பட்டபடிப்பு படிப்பதாகவும் தற்போது மனம் சரியில்லை என்றும், தன்னால் தற்போது சரியாக படிக்க முடியவில்லை: என்றார். ஆனாலும் தான் சரியாக தான் இருப்பதாகவும்  சொன்னார். அவர்கள் பெற்றவர்களிடம் பேசியபோது அந்த பெண் நடந்துகொள்ளும் முறை பற்றி முழுவதும் சொன்னார்கள். பிறகு அந்த பெண்ணிடம் தனியாக பேசியபோது தான் படிக்கும் கல்லூரி விடுதியில் உள்ள பெண்ணுக்கும் தனக்கும் ஒரு தொடர்பு உள்ளதாக எல்லோரும் பேசிக்கொள்கின்றார்கள் என்றார். அத்துடன் விடுதியில் தங்கியுள்ள மற்ற பெண்கள் இவரை டீசிங் செய்ததால் மனரீதியாக பாதிக்கபட்டார்.  பிறகு கல்லூரி விடுதியில் இருந்து   வீட்டுக்கு வந்து தினமும் பஸ்ஸில் கல்லூரிக்கு சென்று வந்தார். ஆனாலும் அவரது மனம் கடுமையாகபாதிக்கபட்டு  தேவையில்லாமல் கோபம் டென்சன், படிப்பில் நாட்டமில்லாமை இனி தான் கல்லூரிக்கு செல்லவில்லை என்று அடம்பித்தல் போன்றவை தொடர்ந்தது.  பல மருத்துவர்களிடம் காட்டியும் அவர்கள் ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள் கொடுத்தும் சாப்பிட சொன்னார்கள். ( ஒரு நாளைக்கு மொத்தம் 35 மாத்திரைக்கு மேல்) மூன்று மாதங்களாக சாப்பிட்டும் எந்தவித மாற்றமும் இல்லாததால் என்னிடம் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அந்த பெண்ணுக்கு சில ஆலோசனை சொல்லி ஆழ்ந்த தூக்க நிலைக்கு அழைத்து சென்று அவரது ஆழ்மனதில் உள்ள பதிவுகளை கேட்டு அதற்கு தக்கவாறு கெட்ட பதிவுகளை அழித்துவிட்டு நல்ல பதிவுகள் பதிவு செய்து தன்னிலைக்கு வரசெய்த பத்து நிமிடங்களில் அந்த பெண் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அவரின் பெற்றோர் ஆச்சர்யம் அடைந்தனர். தற்போது அந்த பெண் நல்ல முறையில் கல்லூரி சென்று படிப்பை முடித்து விட்டார்.. ஒருமுறை செய்த சிகிச்சையில் அந்த பெண் நன்கு குணம் அடைந்தார். இன்று ஒரு ஆசிரியராக வேலை செய்து வருகின்றார். சென்ற வருடம் அவருக்கு திருமணம் நடந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டாடிகொண்டு இருக்கிறார். .


No comments:

Post a Comment