Friday 22 May 2015

உலகத்தில் உள்ள அஷ்டமா சித்திகள் என்பது எது ?


அணிமா  :  அணுவைப் போல் நுட்பமான மிக நுண்ணிய நிலைக்கு உடலை கொண்டு சென்று கண்களுக்கு புலப்படதிருத்தல்.

மகிமா :   உடலை மலையை போல் பிரம்மாண்டமாகப் பெரிதாக்குதல்

இலகிமா  :  காற்றை போல் உடலை லேசாக்குதல், இந்த நிலையை எட்டிய பிறகு ஒரு யோகியால் காற்றில் மிதப்பதும், தண்ணீரில் நடப்பதும் சாத்தியமாகின்றது.

கரிமா  :  எதனாலும் அசைக்க முடியாதபடி உடலை மிகவும் கனமாக்குதல்.

பிராப்தி  :  இயற்கை சக்திகளையும் மற்ற எல்லாப் பொருட்களையும் தன் வயப்படுத்துதல், தன் மனதினால் நினைத்த எதையும் மாற்றுதல் மற்றும் அடைதல்.

பிரகாமியம்  :  தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல் அதாவது கூடு விட்டு கூடு பாய்தல்.

வசித்துவம்விலங்குகள் மனிதர்களுள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் வசியபடுத்தி அனைத்தையும் தன் வசப்படுத்துதல்.

,ஈசத்துவம்ஆக்கல் காத்தல் அழித்தல் முதலானவற்றை செய்யும் இறை சக்த்தியையே பெற்று விடுதல்.
இவைகள் தான் அஷ்டமா சித்திகள் என்கின்ற சக்திகள். .

.

No comments:

Post a Comment